BREAKING NEWS

Nov 7, 2013

பூனைகளை கொன்று முயல்களென விற்பனை


பூனைகளைக் கொன்று தோலுரித்து அவற்றை முயல் இறைச்சி என தெரிவித்து உணவகங்களுக்கு விற்பனை செய்துவந்த குழுவொன்றை சீன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிழக்கு சீனாவில் ஹுவாயியன் நகரிலுள்ள இரகசிய பண்டகசாலையொன்றில் இந்த பூனைகளைக் கொன்று தோலுரித்து பதப்படுத்தும் செயற்கிரமம் இடம்பெற்று வந்துள்ளது.

ஒரு வருடத்திற்கு மேலாக மேற்படி சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த அந்தக் குழுவினர் பூனைகளின் தோலுரிக்கப்பட்ட உடல்களை பொதிசெய்து பொதியொன்றுக்கு 10 யுவான் விலை குறிப்பிட்டு விற்று வந்துள்ளனர்.

அதிகாலை வேளையில் உணவுப் பரிசோதகர்கள் குறிப்பிட்ட பண்டகசாலையை முற்றுகையிட்ட போது, அங்கு சுமார் 60 பூனைகள் உயிருடன் காணப்பட்டதுடன் அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியொன்றில் 30 இறந்த பூனைகளின் உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &