BREAKING NEWS

Nov 25, 2013

அங்கோலா நாட்டில் இஸ்லாத்திற்கு தடை


அங்கோலா நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பதன் முதற் கட்டமாக இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்திருக்கிறார்.

http://dailycaller.com/2013/11/25/angola-bans-islam-will-demolish-all-mosques/

அந்த நாட்டு குடிமக்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் இஸ்லாத்தை மட்டும் பின்பற்ற கூடாது. இதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை தடை செய்த முதல் நாடாக அங்கோலா இடம் பெறுகிறது.

இந்த நாட்டின் கலாச்சார அமைச்சர் ரோசா குருஸ் கூறும் போது:

“இஸ்லாமிய மார்க்கத்தை சட்டபூர்வமாக அங்கிகரிக்க தங்கள் நாட்டு நீதி மற்றும் மனித உரிமை ஆணையம் மறுத்துவிட்டது. இந்த செயல்கள் அங்கோலா அரசின் புதிய சட்டத்தின் படி நடைபெறுகிறது. அங்கோலா நாட்டு மொத்த மக்கள் தொகை 18.1 மில்லியன்.

அதில் 47% தங்கள் நாட்டில் காலம் காலமாக பின்பற்றிய மதத்தையும், 38% ரோமன் கத்தோலிக்ஷம், 15% கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர்கள்.

80 ஆயிரத்திலிருந்து 90ஆயிரம் மக்கள் வரை இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள். இவர்கள் மேற்கு ஆப்ரிக்கா மற்றும் லெபனான் நாட்டில் இருந்து குடி பெயர்ந்தவர்கள்.

 தங்கள் மதங்களை சட்டபூர்வமாக அறிவிக்க சொல்லி, 1000 மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அடுத்த அரசு ஆணை வரும் வரை அனைத்து பள்ளிவாசல்களும்மூடியே இருக்கும்.”

உலகளாவிய அளவில் இஸ்லாத்தின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருப்பதால் நடு நடுங்கி போயுள்ளது புரிகிறது. இஸ்லாம் என்பது எதிர்ப்பில் வளந்த மார்க்கம் என்பதால் அங்கோலா நாடு முழுவதும் இஸ்லாமிய ஜோதி பரவி அங்கோலா நாடு விரைவில் முஸ்லிம் நாடாக உருவெடுக்கும் இன்ஷா அல்லாஹ்!

(தஸ்பீஹ்)


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &