BREAKING NEWS

Nov 26, 2013

“இஸ்லாம் தடை” அங்கோலா தூதரகம் மறுப்பு

சுமார் 3 நாட்களாக ஊடகங்களிலும் ஏனைய சமுக வலையமைப்புக்களிலும் பேசப்படும் ஒரு செய்திதான் ‘அங்கோலா நட்டில் இஸ்லாமிய மார்க்கத்தை தடை செய்யப்பட்டுள்ளது’ என்பது.

 ஆனால் இச்செய்தியை முற்றாக நிராகரித்துள்ளது அமெரிக்காவிலுள்ள அங்கோலா தூதரகம். நேற்றை தினம் திங்கள் (25-11-2013) வாஷிங்டனில் அமைந்துள்ள அங்கோலா தூதரகம் ‘இஸ்லாமிய மர்க்கமும், முஸ்லிம்களும் தடை செய்யப்பட்டுள்ளது’ என்ற செய்தியை மறுத்துள்ளது. இவ்வாறான எவ்வித நடவடிக்கைகளும் எமது நாட்டினால் எடுக்கப்பட வில்லை என்று கூறியுள்ளது.

“அங்கோலா என்ற நாடு எந்த மதத்திலும் தலையிடாத நாடு. இங்கு பல் வேறுபட்ட மதமுடைய மக்கள் வாழுகிறார்கள். இது சுதந்திரமான நாடு. எங்கள் நாட்டில் கத்தோலிக், பெடிஸ்ட், முஸ்லிம் மற்றும் ஏனைய மதத்தவர்களை சேர்ந்தவர்கள் இங்கு வாழுகிறார்கள்” என்று கூறியுள்ளது.

அங்கோலாவின் கலாச்சார அமைச்சர் ரோசா குருஸ் ஈ சில்வா கூறிய கூற்றை ஊடகங்கள் தவறாக சித்தரித்துள்ளது.

அத்தூதரகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கருத்து  தெரிவிக்கையில்:
“இஸ்லாமிய மார்க்கத்தை நீதி அமைச்சும், மனித உரிமையும் இன்னும் சட்டபூர்வமான மதமாக பிரகடனப்படுத்தவில்லை, எனவே அடுத்த அறிவித்தல் வரும் வரை அவர்களின் மஸ்ஜித்கள் (பள்ளிவாசல்கள்) மூடப்பட்டிருக்கட்டும்” என்றும், ஜனாதிபதி சாண்டோஸ், கூறியதாக “இந்த நாட்டில் இஸ்லாமிய செல்வாக்கிற்கு இதுதான் இறுதியான முடிவு” என்றும் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இவை யாவும் உண்மை அல்ல. மேலும் அவர் கூறுகையில்:
ஜனாதிபதி ஒரு வாரமாக வெளிநாடு சென்றுள்ளார். இப்படி இருக்கும் போது எவ்வாறு இவ்வாறான ஒரு கூற்றை அவர் கூறுவார்; என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அது மட்டுமல்ல, “அங்கோலன் செய்தி பத்திரிகைகளில் இது சம்பந்தமாக எவ்வித செய்தியும் வெளி வரவில்லை” என்றும் குறிப்பிட்டார்.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &