
இரண்டு பஸ்கள் வீதியை விட்டு விலகி இரு மரங்களில் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளனர்.
எப்பாவல, கட்யாவே எனுமிடத்திலேயே இந்த விபத்து இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
பொல்பிட்டிகமவிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த இரண்டு பஸ்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் நால்வர் உட்படக 14 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையினால் அவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.