மாலபே கல்வாரி மலை தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் ஷிராண் குணரத்ன கூறுகையில், குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதோ அல்லது திருத்தம் செய்வது சட்டமா அதிபரின் கடமையென அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி 2008ஆம் ஆண்டு மாலபே கல்வாரி மலை தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்திற்கு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக மத உரிமையை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்யவேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி காலையில் கலபொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சிலர் தமது தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து தேவாலயத்திலுள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக போதகரான ஹென்ரிக்சன் சாட்சியமளித்துள்ளார்.
மாலபே கல்வாரி தேவாலயத்திற்கு தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்திற்கு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிரதிவாதிகள் பன்னிரண்டு பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு நவம்பர் மாதம் பதினெட்டாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.-ஸ்ரீ லங்கா மிரர்