இன்று திங்கட்கிழமை மாலை ஐந்து மணிக்கு குருநாகல் மலிகாப்பிட்டிய மைதானத்தில் இடம்பெறவிருக்கும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் 2013 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான பொதுப் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வருகை தர இருக்கின்றார்.
ஏராளாமான மக்கள் இதுவரையில் மலிகாப்பிட்டிய மைதானத்தில் ஒன்றுகூடியிருப்பதை காணக்கூடியதாகவூள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடமேல் மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் உட்பட ஏராளமான ஆதரவாளர்கள் ஜனாதிபதியின் வருகை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள்ளேயே பல்வேறு போட்டிகள் மற்றும் அடிதடிகளுக்கு மத்தியில் இடம்பெறும் இம்முறை வடமேல் மாகாண சபைத் தேர்தலில் பிரதம போட்டியாளர்களாக தயாசிறி ஜயசேகர ஜொஹான் பெர்ணாண்டோ மற்றும் அத்துல விஜேசிங்ஹ ஆகியோரிடையே பலத்த போட்டி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(AM AHLAM)