BREAKING NEWS

Aug 8, 2013

நாட்டின் சில இடங்களில் இன்று நோன்பு பெருநாள்! – PHOTOS

பறகஹதெனிய (தௌஹீத் ஜமாஅத்) கிண்ணியா, பேருவளை, ஏறாவூர், கல்முனை உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்கள்  சிலர் புனித  நோன்பு பெருநாளை இன்று வியாழக்கிழமை கொண்டாடுகின்றனர்.
 .
புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் நேற்று புதன்கிழமை தென்பட்டவில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிவித்ததுள்ளது.
 .
இதற்கிணங்க இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை வியாழக்கிழமை 30ஆவது நோன்பு நோற்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்தது.
 .
இந்த நிலையிலேயே இலங்கை வாழ் முஸ்லிம்கள்  சிலர்  இன்று வியாழக்கிழமை நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
 .
கிண்ணியாவின் நான்கு பிரதான கிராமங்களில் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை நேற்று மாலை தென்பட்டுள்ளதாகவும் கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.(அதன் ஆதாரங்கள் போதியதாக அமையவில்லை பரஸ்பர விரோதமானவை)
.
இதனால் கிண்ணியா பிரதேசத்தில் புனித நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுமாறு அறிவித்திருந்தனர். இதனையடுத்து தௌஹீத் ஜமாஅத்தினரும் புனித நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுமாறும் அறிவித்திருந்தனர்.
 .
கிண்ணியா பிரதேசத்தில் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை தென்பட்டது தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவிற்கு அறிவித்ததாக கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெயக் வீ.எம்.ஹினாயத்துல்லா (நளீமி) தெரிவித்தார்.
 .
எனினும் இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எவ்வித நடவடிக்கையும் எடுக்வில்லை என அவர் குறிப்பிட்டார். நீண்ட கலந்துரையாடலின் பின்னர் சுமார் நள்ளிரவு 1.30 மணியளவில் கிண்ணியா பிரதேசத்தில் நோன்பு பெருநாளைக் கொண்டாட முடிவு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
 .
இதேவேளை பறகஹதெனிய (தௌஹீத் ஜமாஅத்) கிண்ணியா உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று காலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 .


DSC03307DSC03308DSCF3126
kb


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &