BREAKING NEWS

Aug 4, 2013

Mount Lavinia அத்திடிய பள்ளி வாசலுக்கு பௌத்த தேரர் அச்சுறுத்தல்

கொழும்பு - அத்திடிய பகுதியிலுள்ள பள்ளிவாசலுக்கு இன்று சனிக்கிழமை, 3 ஆம் திகதி பௌத்த தேரர் தலைமையிலான குழுவொன்று சென்று அப்பள்ளிவாசலை உடனடியாக மூடிவிடும்படி அச்சுறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த பள்ளிவாசல் உரியமுறையில் பதிவு செய்யப்பட்டு, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் நிலையிலேயே இந்தப் பள்ளிவாசலை உடனடியாக மூடும்படி பௌத்த தேரர் தலைமையிலான குழுவினர் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த அச்சுறுத்தல் குறித்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரையில், விகாராதிபதி தலைமையில் அங்குள்ள பௌத்தர்கள் அழைக்கப்பட்டு, குறித்த பள்ளிவாசலுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &