ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை கண்டித்து 'ராவணா சக்தி' எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது.
கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகி;ன்றது. இதனால் பௌத்தாலோக மாவத்தை மற்றும் தும்முள்ள சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.