தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், தங்கைக்கு பதிலாக பரீட்சைக்குத் தோற்றிய பட்டதாரி சகோதரியொருவரை அடையாளம் கண்ட பரீட்சை மேற்பார்வையாளர்கள், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு சகோதரிகளும் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவ்விருவரையும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
உயர்தரப் பரீட்சையின் நடனம் பாடப் பரீட்சையின் போதே இவர்கள் ஆள்மாறாட்டம் செய்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும் கொலன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.