BREAKING NEWS

Aug 7, 2013

மார்பகங் களுக்குள் போதைப் பொருள்; குடுராணி கைது

மார்பகங்களுகளுக்குள் மறைத்து போதைப்பொருட்களை கடத்திய பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு-14 கிராண்பாஸிலிருந்து கண்டி நகரத்திற்கு ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்திய 'குடுராணி' என்றழைக்கப்படும் 29 வயதான யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் இந்த பெண் கண்டி நகரத்தில் வைத்தே இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்த பொலிஸார் அவருடைய மார்பகங்களுக்குள் மறைத்துவைத்திருந்த 48.65 கிராம் ஹெரோயினையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &