கொழும்பு கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பிற்பகல் 1:30 மணியளவில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரு கார்களில் வந்த ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் வங்கிக்கு கொண்டு செல்லவிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சேகரிக்கப்பட்ட 22 இலட்சம் ரூபாய்கள் பணமே கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
மேலாதிக்க விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.