BREAKING NEWS

Aug 19, 2013

இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டி முடிவுகள்

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பித்துள்ளன. சனிக்கிழமை ஆரம்பித்த இப்போட்டிகளின் முதலாவது வார இறுதியில் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ளன.

ரொட்டென்ஹம் அணிக்கும், கிறிஸ்ரல் பலஸ் அணிக்குமிடையிலான போட்டியில் ரொட்டென்ஹம் அணியின் றொபேர்ட்டோ சொல்டடோவின் கோலின் உதவியுடன் அவ்வணி 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

செல்சீ அணிக்கும், ஹள் சிற்றி அணிக்குமிடையிலான போட்டியில் ஒஸ்கார், பிராங்க் லம்பார்ட் இருவரும் பெற்றுக் கொடுத்த கோல்களின் உதவியுடன் செல்சீ அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

லிவர்பூல் அணிக்கும், ஸ்ரோக் அணிக்குமிடையிலான போட்டியில் லிவர்பூல் அணியின் டானியல் ஸ்ரறிட்ஜின் கோலின் உதவியுடன் அவ்வணி 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

அஸ்ரன் வில்லா அணிக்கும், ஆர்சனல் அணிக்குமிடையிலான போட்டியில் அஸ்ரன் வில்லா அணி 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. அஸ்ரன் வில்லா அணி சார்பாக கிறிஸ்ரியன் பென்ரக்கே 2 கோல்களையும், அன்ரோனியோ லூனா ஒரு கோலையும் பெற, ஆர்சனல் சார்பாக ஒலிவர் கிரியோட் கோலொன்றைப் பெற்றார்.

எவேர்ட்டன் அணிக்கும், நோர்விச் அணிக்குமிடையிலான போட்டி 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. நோர்விச் சார்பாக ஸ்டீவன் வைற்றக்கெர், றிக்கி வான் வோல்ஃப்விங்கெல் ஆகியோர் தலா ஒரு கோலையும், எவேர்ட்டன் சார்பாக றொஸ் பார்க்லே, செமஸ் கோல்மன் இருவரும் தலா ஒரு கோலைப் பெற்றனர்.

சண்டர்லான்ட் அணிக்கும், ஃபுல்ஹாம் அணிக்குமிடையிலான போட்டியில் பஜ்ரிம் கஸாமி பெற்றுக் கொடுத்த கோலின் உதவியுடன் ஃபுல்ஹாம் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

சௌதம்டன் அணிக்கும், வெஸ்ற் ப்ரோம்விச் அணிக்குமிடையிலான போட்டியில் றிக்கி லாம்பேர்ட் பெற்றுக் கொடுத்த இறுதிநேர பெனால்ட்டியின் உதவியுடன் சௌதம்டன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் றற்றிபெற்றது.

வெஸ்ற் ஹாம் யுனைட்டட் அணிக்கும், கார்டிப் அணிக்குமிடையிலான போட்டியில் ஜோ கோல், கெவின் நோலன் இருவரும் பெற்றுக் கொடுத்த கோல்களின் உதவியுடன் வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மன்செஸ்ரர் யுனைட்டட் அணிக்கும், ஸ்வன்சீ அணிக்குமிடையிலான போட்டியில் மன்செஸ்ரர் யுனைட்டட் அணியின் றொபின் வான் பேர்சி, டனி வெல்பெக் இருவரின் தலா 2 கோல்களின் உதவியுடன் அவ்வணி 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. ஸ்வன்சீ சார்பாக போனி வில்பிரட் ஒரு கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &