'கபே' அமைப்பிடம் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் அதிகமானவை மத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் இருந்து கிடைக்கப் பெற்றிருப்பதாக கபேயின் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பான அதிகப்படியான முறைப்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சியினரால் முறையிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மொத்தமாகக் கிடைக்கப் பெற்றுள்ள தேர்தல் தொடர்பான 122 முறைப்பாடுகளிலும் 115 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பானதாகவும் ஏழு முறைப்பாடுகள் ஆட்களை காயப்படுத்தியமை தொடர்பானது எனவும் அவர் தெரிவித்தார்.