மொபைல் போன் விற்பனைகள் நாளுக்கு நாள் அதிகம் ஆகிறதே தவிர குறைவதே இல்லை. உலக அளவில் 2013ன் இரண்டாவது காலாண்டில் மட்டும் கிட்டதிட்ட 43 கோடி மொபைல் போன்கள் விற்பனை ஆகியுள்ளன.
இது கடந்த ஆண்டைவிட 3.6% அதிகம் ஆகும். கார்ட்னர் ஆய்வு அறிக்கையின்படி கிட்டதிட்ட 22 கோடி ஸ்மார்ட்போன்களும் மற்றும் 21 கோடி மற்ற மொபைல்களும் விற்பனை ஆகியுள்ளன.
உலக அளவில் எந்த மொபைல் கம்பெனிகள் அதிக மொபைல்களை விற்பனை செய்துள்ளன என்கின்ற டாப் 10 ரேங்க் பட்டியலை கீழே பாருங்கள்.
RANK 10: யூலாங் என்ற சைனீஸ் கம்பெனி சீனாவில் மூன்றாவது பெரிய மொபைல கம்பெனியாகும் உலக அளவில் இது பத்தாவது இடத்தில் உள்ளது. 2013ன் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனம் 79லட்சம் மொபைல்களை விற்பனை செய்துள்ளது.
RANK 09: SONY
ஒன்பாதவது இடத்தில் சோனி உள்ளது. இந்நிறுவனம் 95லட்சம் மொபைல்களை விற்பனை செய்துள்ளது.
RANK 08: சைனீஸ் கம்பெனியான TCL கம்மியூனிக்கேஷன் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 1 கோடி மொபைல்களை விற்பனை செய்துள்ளது.
RANK 07:
லினோவோ நிறுவனம் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 1 கோடியே 9 லட்சம் மொபைல்களை விற்பனை செய்துள்ளது.
RANK 06: HUAWEI
சைனீஸ் கம்பெனியான HUAWEI ஆறாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 1 கோடியே 10 லட்சம் மொபைல்களை விற்பனை செய்துள்ளது.
RANK 05:
மற்றும் ஒரு சைனீஸ் கம்பெனியான ZTE ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 1 கோடியே 50 லட்சம் மொபைல்களை விற்பனை செய்துள்ளது.
RANK 04: LG
எல்ஜி நிறுவனம் நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 1 கோடியே 70 லட்சம் மொபைல்களை விற்பனை செய்துள்ளது.
RANK 03: APPLE
மூன்றாவது இடத்தில் ஆப்பிள் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் 2 கோடியே 89 லட்சம் மொபைல்களை விற்பனை செய்துள்ளது.
RANK 02: NOKIA
இரண்டாவது இடத்தில் நோக்கியா நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் 6 கோடிக்கும் அதிகமான மொபைல்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நோக்கியா நிறுவனம் கம்மியான அளவில் தான் மொபால்களை விற்பனை செய்துள்ளது.
RANK 01: SAMSUNG
முதல் இடத்தில் SAMSUNG நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் 10 கோடிக்கும் அதிகமான மொபைல்களை விற்பனை செய்துள்ளது.