அரசு ஹலால் சான்றிதழ் நீக்கும் என்று உறுதியளித்த போதிலும் அது அவ்வாறு செய்ய தவறிவிட்டது. அமைச்சர் பசில் ராஜபக்ஷ இது பற்றி பெளத்த சமூகத்துக்கு ஒரு தெளிவான பதிலை கொடுக்க வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரார் தெரிவித்துள்ளார்.
இன்று (25) காலியில் நடந்த பொதுபல சேனா மாநாட்டில் பேசும் போது ஞானசார இவற்றை தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் உரையாற்றும்போது அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஹலால் சான்றிதழை அறிமுகப்படுத்துதில் ஒருபெரும் பங்களிப்பை செய்திருந்தார் என்று முஸ்லிம் தலைவர்கள் என்னிடம் சொன்னார்கள். இப்போது பொதுபல சேனா மீது ஊடக தணிக்கையை உள்ளது, அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த பின்னணியில் இருப்பவர்களில் ஒருவர் என்று வெளிப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.