
அஸ்ஸலாமுஅலைக்கும்
விஷேட விரிவுரையும் கேள்வி பதில் நிகழ்ச்சியும்
தலைப்பு:
தஃவாவின் அவசியமும் வழிகாட்டல்களும்
(திறந்த கேள்வி பதில் நிகழ்ச்சி)
உரை: ஷேய்க் SHM. இஸ்மாயில் ஸலபி (B.A.) (“உண்மை உதயம்” இஸ்லாமிய மாத இதழ் ஆசிரியர்)
காலம்: இன்ஷாஅல்லாஹ் இன்று (06/07/2013) மஃரிப் முதல் இரவு பத்து மணிவரை
இடம்: fபனார் இரண்டாம் மாடி
சகோதரர்களே !
இஸ்லாத்தை மாற்று மதத்தவர்கள் ஒரு வெடிகுண்டாகப் பார்க்குமளவு இஸ்லாம் விரோதிகளால் தொடர்ந்து பிழையாகச் சித்தரிக்கப்படுகின்றது.
மறுபுறம், பெரும்பாலான முஸ்லிம்கள் இஸ்லாத்தில் பெயரளவில் இருந்துகொண்டு அன்றாட வாழ்க்கையில் மாற்று மத அனுஷ்ட்டானங்களையும் கலாச்சாரங்களையுமே பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்தின் பெயரால் ஷிர்கும் பித்அதும் முஸ்லிம்களிடம் மலிந்து காணப்படுகின்றது.
தூய இஸ்லாத்தை உள்ளும் புறமும் உலகின் காதுகளுக்குள் ஊதுவது இஸ்லாமிய உணர்வு கலந்த இதயத் துடிப்புள்ளவர்கள் ஓவ்வொருவரினதும் கடமையாகும்.
அழைப்புப் பணி அல்லாஹ்வின் தூதர் எம் கரங்களில் ஒப்படைத்துவிட்டுச்சென்ற அமானிதமாகும். இந்த அமானிதத்தை பொறுப்பாக தலைகளில் சுமந்து நிறைவேற்றிக் கொண்டிருப்பவர்கள் எத்தனைபேர் ?
சிலர் தஃவாச் செய்கின்றார்கள், ஆனால் எத்தனைபேர் இஸ்லாம் காட்டிய வழிமுறையில் முறையாகத் தஃவாச் செய்கிறார்கள்?
சகோதரர்களே !
பெரும்பாலான முஸ்லிம்களால் உணரப்படாத கடமையான அழைப்புப் பணியின் அவசியம் அதன் வழிமுறைகள் பற்றி இன்று விளக்கவுரை ஒன்றை SLDC ஏற்பாடு செய்துள்ளது. இதில் தவறாது கலந்துகொண்டு பயன்பெற வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.