BREAKING NEWS

Jul 6, 2013

முதலமைச்சர் நாவின்னையா? தயாசிரியா??



















வடமேல்  மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இருக்கும் இவ்வேளையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய முரணான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன ஏற்கனவே பாராளுமன்ற அமைச்சுப் பதவி வகிக்கும் நாவின்ன தனக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்ப்படுமாயின் தான் அமைச்சுப்பதவியை விட தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கினரமை குறிப்பிடத்தக்கது  அத்துடன் ஏற்கனவே முதலமைச்சராக  கடமையாற்றிய அதுல விஜெசிங்க்ஹவும் மீண்டும் முதலமைச்சுப் பதவி தனக்கு கிடைக்க வேண்டுமேட்ன்ர எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் தெரியவருகின்றது

அதேவேளை தனக்கு வடமேல் மாகாண முதலமைச்சுப்பதவி கொடுக்கப்படுமாயின் தான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும்,  பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகத் தயாராக இருப்பதாக  ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இவ்வாறிருக்கையில் அண்மையில் வடமேல் மாகாணத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதேச மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடன் அலறி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போது தயாசிறி ஜயசேகர அவ்வாறு வந்தால் என கேள்வி எழுப்பியவிடத்து சகல அமைப்பாளர்களும் அதுபற்றி தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்திருந்தமை விசேட அம்சமாகும்

எனவே வடமேல் மாகான தேர்தலில் இவ்வாறு இப்போதைக்கே போட்டி நிலவும் பட்சத்தில் முதலமைச்க்கர் பதவி யாருக்கு கொடுப்பது என்பது தேர்தல் முடிவின் பின்னர் தீர்மானிக்கப்படும் நிலைமை ஏற்பட வாஇபிருப்பதாகவும் தயாசிறி வரும் பட்சத்தில் அவருக்கு  வழங்க வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் விற்பன்னர்கள் தெரிவிக்கின்றனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &