BREAKING NEWS

Jul 6, 2013

பாதாள கோஷ்டிகளுடன் அரசியல் வாதிகள் தொடர்பு: 'மாமாஸ்மீ'


பாதாள உலகக் கோஷ்டிகளுடன் தொடர்பு இருப்பதாகக்கூறி இரண்டு அரசியல்வாதிகள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட பதாள உலகக் கோஷ்டித் தலைவர் மாமாஸ்மீ, மரணிப்பதற்கு முன்னர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே அவ் அரசியல்வாதிகள் இருவர் மீதும் விசாரணைகள் முன்னெடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அரசியல்வாதிகள் தரம் குறைந்த உதிரிப்பாகங்களைப் பொருத்தி தூரப் பிரதேசங்களில் வாகன விற்பனை மேற்கொண்டு வருவதாகவும் இவர்கள் பாதாள உலகக் கோஷ்டியினருடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &