BREAKING NEWS

Jul 6, 2013

இலங்கையில் மாடு வெட்டுதலுக்கு விரைவில் தடை?


இலங்கையில் மாடு வெட்டும் நடவடிக்கையை தடைசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவில் எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிஹல ராவய அமைப்புக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாடு வெட்டுவதை தடைசெய்ய வலியுறுத்தி கதிர்காமத்தில் இருந்து கொழும்பு வரை பாதயாத்திரையாக வந்த சிஹல ராவய அமைப்பின் அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் ஜனாதிபதியிடம் இது தொடர்பில் மகஜர் ஒன்றைக் கையளித்திருந்தார்.

இதன்போது அவர் இலங்கையில் மாடு வெட்டுவதை தடைசெய்யும் படியும், உடனடியாக வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கையெடுக்கும்படியும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &