BREAKING NEWS

Jul 6, 2013

கொழும்பில் இன்று ஒருவழிபாதை ஒத்திகை

கொழும்பில், ஒருவழிபாதை ஒத்திகை வெற்றியளித்துள்ளதையடுத்து ஒருவழி பாதையை விஸ்தரிப்பதற்கான மற்றுமொரு ஒத்திகை இன்று சனிக்கிழமை இடம்பெறவிருக்கின்றது என்று போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பு, டி சொயிசா சுற்றுவட்டம், கன்னங்கர மாவத்தை, எப்.ஆர்.சேனாநாயக்க மாவத்தை, தரமபால மாவத்தை, லிப்டன் சுற்றுவட்டம் மீண்டும்
டி சொயிசா சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் ஒருவழி போக்குவரத்து ஒத்திகை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த ஒத்திகை இன்று சனிக்கிழமை காலை 6 மணி தொடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &