BREAKING NEWS

Jul 30, 2013

புத்தளம் மாவட்டத்தில் தனித்து போட்டி: அசாத் சாலி

தேசிய ஐக்கிய முன்னணி புத்தளம் மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய ஐக்கிய முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்ததாகவும் அதுகுறித்து சாதகமான முடிவு கிடைக்காத பட்சத்தில் கட்சியின் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்நிலையில் தேசிய ஐக்கிய முன்னணி கண்டி, மாத்தளை, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ள அதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் மட்டும் தனித்து போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &