முதலாவது 5.98 ரிச்டர் பூமியதிர்ச்சியானது டிங்ஸி நகருக்கு அண்மையில் 9.8 கிலோ மீற்றர் ஆழத்தில் தாக்கியுள்ளது.
அந்த பூமியதிர்ச்சி தாக்கி ஒரு மணித்தியாலத்தில் அதே பிரதேசத்தை 5.6 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி தாக்கியுள்ளது.
மேற்படி பூமியதிர்ச்சிகளைத் தொடர்ந்து அந்த பிராந்தியத்தை 371 சிறிய பூமியதிர்ச்சிகள் அடுத்தடுத்து தாக்கியுள்ளன.
இந்தப் பூமியதிர்ச்சிகளால் ஸாங்ஸியான் எனும் இடத்தில் குறைந்தது 5,600 வீடுகள் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் 380 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
18 மாடிகளைக் கொண்ட தொழிற்சாலைக் கட்டடமொன்று பூமியதிர்ச்சியால் தரைமட்டமாகியுள்ளது.
மேலும், பல பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் கையடக்கத் தொலைபேசி தொடர்பாடல்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
வீடுகள் இடிந்து விழுந்ததாலேயே பலரும் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி பூமியதிர்ச்சிகளால் 198 மில்லியன் யுவான் (32 மில்லியன் அமெரிக்க டொலர்) பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக டிங்ஸி நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் பிரதமர் லி கெகியாங்கும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்புப் பணிகளை துரிதமாக முன்னெடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தீயணைப்புப் படை வீரர்கள் மோப்ப நாய்கள் சகிதம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் மீட்பு நடவடிக்கையில் 500 படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவின் சிசுவான் மாகாணத்தை 2008 ஆம் ஆண்டு தாக்கிய பூமியதிர்ச்சியில் 90,000 க்கும் அதிகமானோர் பலியானமை குறிப்பிடத்தக்கது.