BREAKING NEWS

Jun 14, 2013

இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை : ICC CHAMPIONS TROPHY

இங்கிலாந்தில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டிராட் 76 ரன்கள், ரூத் 68 ரன்கள், குக் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து, 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 47.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் சங்ககரா 133 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &