BREAKING NEWS

Jun 14, 2013

பாகிஸ்தானின் முதல் பெண் போர் விமானி

இஸ்லாமியக் குடியரசான பாகிஸ்தான் நாட்டில் ஒரு பெண், போர் விமானியாகப் பணிபுரியும் தகுதியைப் பெற்றுள்ளார். கடந்த வருடங்களில், மொத்தம் 19 பெண்கள் பாகிஸ்தான் விமானப் படையில் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றுள்ளார்கள். இவர்களுள் 6 பேர் போர் விமானப் பயிற்சி பெற்றுள்ளனர். இதில் 26 வயது நிரம்பிய ஆயிஷா ஃபரூக் என்ற இளம்பெண் அனைத்துப் பயிற்சிகளையும் முடித்து பாகிஸ்தானின் விமானப் படையில் இடம் பெற்றுள்ளார்.

பஞ்சாப் மாகாணத்தின் பகவல்பூரைச் சேர்ந்த ஆயிஷாவிடம் தனியாக ஒரு பெண் போர் விமானத்தில் பணியாற்றுவது குறித்து கேட்கப்பட்டது.அதற்கு, 

தனக்கு எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை என்று அவர் கூறினார். ஆண்கள் செய்யும் அனைத்து செயல்களையும் தானும் செய்வதாகவும், துல்லியமாக வெடிகுண்டுகளை வீசுவதாகவும் பதில் அளித்தார். 

தலிபான்களின் போராட்டமும், பெருகி வரும் இனக்கலவரங்களும், பாகிஸ்தானின் புவி அமைப்பும் தங்களை எந்த நேரமும் தயாராக வைத்திருக்கத் தூண்டுகின்றது என்றும் அவர் கருதுகின்றார். பக்கத்து நாடான ஆப்கானிஸ்தானில் ஐரோப்பிய யூனியன் படைகள் அடுத்த வருடம் விலகுவதும், கிழக்கு எல்லை குறித்து இந்தியாவுடன் பிரச்சினைகள் தோன்றுவதும் கூட கவனத்திற்குரிய விஷயங்கள் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &