உத்தரகாண்ட் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை இந்திய விமானப் படையினர் மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். ஜோசிமாத் என்ற இடத்தில் சிக்கிக் கொண்டார் ஹர்பஜன் சிங். அப்பகுதியில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களும் மாட்டிக் கொண்டனர்அவர்களுக்கு ஆறுதல் அளித்தபடி தானும் தைரியமாக இருந்தார் ஹர்பஜன் சிங். மேலும் அங்குள்ள இந்தோ திபெத் பாதுகாப்புப் படை முகாமில் அவர் தங்கியிருந்தார். இந்த நிலையில் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஹர்பஜன் சிங் மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறுகையில், பதன்கோட் பிரிவு விமானப்படையினர் என்னை மீட்டுள்ளனர். அவர்களால் மீட்கப்பட்டது இனிய நினைவாகும் என்று கூறியுள்ளார்.