BREAKING NEWS

Jun 22, 2013

தெலியகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் ஆர்பாட்டம்



குருணாகல், தெலியகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசலின் முன்னால் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)யைச்சேர்ந்த கும்பலொன்று இன்று மாலை அரசாங்கத்தின் மின் கட்டணத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து ஊராரின் எந்த சம்பந்தமுமோ ஆதரவோ இன்றி பலவந்தமாக பிரச்ணையை தோற்றுவிக்கும் வகையில் ஆர்ப்பாட்மொன்றை நடத்த முயன்ற பொழுது,ஊர் மக்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த வந்தவர்களுக்குமிடையில் பலத்த தகராறு ஏற்பட்டது.


விடயம் குருணாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுத்நதிரக் கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் அவர்களுக்கு தெரியப்படுத்திதையிட்டு ஸ்தலத்திற்கு விரைந்த்துடன் பள்ளிவாசல் நிர்வாகமும்பொலிசாரும் வரவழைக்கப்பட்டனர்.

சில இனவாதமானபேச்சுக்களும் வந்தவர்களால் பேசப்பட்டது. தெலியாகொன்னைக்கு எந்த சம்பந்தமுமில்லாமல் முஸ்லிம்கள் செரிந்து வாழும் பகுதிகளில் அநாவசியமான பிரச்னைளை உருவாக்கவேண்டமென்று அப்துல் சத்தாரால் ஜே.வி.பியினர் எச்சரிக்கையான முறையில் அறிவுறுத்தப்படுத்தப்பட்துடன். ஆர்ப்பாட்மொன்றை நடத்த முயன்றவர்கள் அங்கிருந்து கலைக்கப்பட்டனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &