BREAKING NEWS

Jun 10, 2013

சிலாபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட கஞ்சா: ஒருவர் கைது!

ss
தனமல்வில பிரதேசத்திலிருந்து சிலாபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகை கஞ்சா போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (10) இடம்பெற்ற சுற்றி வளைப்பின்போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேகநபரிடமிருந்து 10 லட்சம் ரூபா பெறுமதியான 25 கிலோ கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா சிலாபம், ஆரச்சிகட்டுவ, மாதம்பே மற்றும் மாரவில பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காக எடுத்துவரப்பட்டதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் மற்றும் கஞ்சா சிலாபம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &