20ஆம் நூற்றாண்டில் உலகளாவிய ரீதியில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக திகழ்ந்தவரும் தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
94 வயதான நெல்சன் மண்டேலா நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8ஆம் திகதி பிரிட்டோரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினத்தினத்திலிருந்து அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகோப் சுமா தெரிவித்துள்ளார்.
மண்டெலா கடந்த ஆறு மாதங்களில் நான்காவது முறையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், கவனமுடன் பார்த்துக் கொள்ளப்படுவதாகவும் கூறிய ஜனாதிபதி, வயதான காரணத்தால் அவரது உடல்நிலை சிரமத்தைத் தரும் என்பதனை மக்கள் உணரவேண்டும் என்று கூறினார்.
மண்டேலாவின் உடல்நிலை சீரமைய வேண்டும் என 32 மில்லியன் மக்கள் இளை பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று நூற்றாண்டுகளாக வெள்ளையர் ஆதிக்கத்திலேயே இருந்து வந்த தென்னாபிரிக்காவில், தனது பெருமுயற்சியின் விளைவாக 1994ஆம் ஆண்டு குடியாட்சி மலரச் செய்து, கறுப்பின மக்களும் அதில் பங்கு கொள்ளும்படி நிறவெறிக் கொள்கையை மாற்றியமைத்த பெருமை நெல்சன் மண்டேலாவைச் சேரும்.
மண்டேலா 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பொது வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தார்.
