எதிர்காலத்தில் வீட்டுப் பாவனைக்காக சூரிய சக்தியூடாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தைப் பயன்படுத்தும் திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றாடல் மற்றும் மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
நுகேகொடை, ஸ்டென்லி திலகரட்ண வீதியில் சூரிய சக்தியில் செயற்படும் வீதி விளக்குக் கட்டமைப்பினை திறந்துவைக்கும் சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் மின் உற்பத்திக்கான செலவைக் குறைக்க முடியுமென சுற்றாடல் மற்றும் மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சு குறிப்பிடுகின்றது.