வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லியாகொஸ் கொலனி மேற்பிரிவில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மீட்கப்பட்ட இச் சடலம் 63 வயதான செம்புலிங்கம் வள்ளியம்மா என்பவருடையது என்று வட்டவல பொலிஸார் தெரிவித்தனர். இவரது சடலம் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வட்டவளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.