BREAKING NEWS

Jun 13, 2013

ஸ்ரீசுக செயற்குழு இன்று கூடுகிறது: மாகாண சபை திருத்தம் அமைச்சரவைக்கு

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (13) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இதன்போது வட மாகாணம் உள்ளிட்ட சில மாகாணங்களுக்கு தேர்தல் நடாத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. 

வட மாகாணத்திற்கு தனியாக தேர்தல் நடத்துவதா அல்லது ஏனைய மாகாணங்களோடு சேர்த்து தேர்தல் நடாத்துவதா என்று இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, மாகாண சபை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் பிரேரணை இன்று அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது. 

கடந்த அமைச்சரவையில் இந்த பிரேரணை முன்வைக்கப்படவிருந்த போதும் ஆளும் கட்சிக்குள் காணப்பட்ட எதிர்ப்பு காரணமாக பிற்போடப்பட்டது. 

எனினும் இன்று காலை கூடவுள்ள அமைச்சரவையில் இந்த பிரேரணை சமர்பிக்கப்படவுள்ளது. 

குறித்த திருத்தத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 

தமது எதிர்ப்பை ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் கூறியுள்ளது. 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &