அழுத்கமையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் மூவர் பலியாகியுள்ளதுடன் எழுவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அழுத்கமை ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடவையை கடக்க முற்பட்ட வான் ஒன்றை ரயில் இடித்துத் தள்ளியதிலேயே மேற்படி மூவர் பலியாகியுள்ளதுடன் ஏழுபேர் படுகாயமடைந்துமுள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் தற்சமயம் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.