BREAKING NEWS

Jun 17, 2013

வடமேல், மத்திய மாகாண சபைகள் கலைக்கப்படும்

வடமேல் மற்றும் மத்திய மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் ஒன்றிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். 

17-06-2013 அலரி மாளிகையில் இக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன்படி காலை முற்பகல் வேளையில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் இடம்பெறவுள்ளது. 

இதன்பின்னதாக வட மேல் மாகாண ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம் மாலை இடம்பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

விசேடமாக மத்திய மற்றும் வட மேல் மாகாணங்கள் கலைக்கப்படுவது தொடர்பில் இதன்போது பேசப்படவுள்ளது. 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &