BREAKING NEWS

Jun 10, 2013

முஸ்லிம் டாக்டர்க்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மத்திய மாகாணசபை ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர் துஷார ஸ்வர்ணதிலக்க தலைமையில் பேராதனையில் வைத்தியசாலை முஸ்லிம் மகப்பேற்று வைத்திய அதிகாரிகள் இருவருக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது . பேராதனை வைத்திய சாலையில் மகப்பேற்றுப் பிரிவில் அனுமதிக்கப்படும் சிங்கள பௌத்த பெண்களை கட்டாயப்படுத்தி குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்வதாகவும், அவர்களை கட்டாயப்படுத்தி குடும்பக் கட்டுப்பாட்டு மருந்துகளை அவர்கள் மீது திணிப்பதாகவும் குற்றஞ்சாட்டுகளை முன்வைத்து மத்திய மாகாணசபை ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர் துஷார ஸ்வர்ணதிலக்க தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப் பட்டுள்ளது

ஆர்ப்பாட்டகாரர்களுடன் கலந்துரையாடிய பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சந்திரா குணதிலக்க இக் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக 48 மணித்தியாலத்திற்குள் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதாகவும் குறித்த வைத்தியர்களில் தவறு காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &