BREAKING NEWS

May 17, 2013

கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!



ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் என்பது ஒரு முக்கியமான ஒன்று. கர்ப்பத்திற்கு பிறகு பெண்கள் சில மாறுதல்களை பெறுகின்றனர். அதுமட்டுமின்றி, ஒருசில செயல்களிலும், வாழ்க்கை முறையிலும் பல மாறுதல்கள் உள்ளன. மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் உண்ணும் உணவுகள், பயணங்கள், பளுவுள்ள பொருட்கள் தூக்குவதை தவிர்த்தல் என்பனவற்றை மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பெண்கள் இன்னும் பல செயல்களில் மிகவும் கவனத்துடன் நடக்க வேண்டும். உதாரணமாக, கர்ப்பத்தின் போது உடற்பயிற்சி செய்வது நல்லது. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால், வேறு பல பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும். எனவே கர்ப்பிணிகளுக்காக தமிழ் போல்ட் ஸ்கை, ஒருசில ஆபத்தை விளைவிக்கும் செயல்கள் என்னவென்று, சேகரித்து, அவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை தவிர்த்து சந்தோஷமாக இருங்கள்.

ஹீல்ஸ் அணிவது HIGH HEELS

கர்ப்பிணிகள் உணரமான ஹீல்ஸ் அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அவை முதுகு வலியை உண்டாக்குவதோடு, கால் வலியுடன், சில சமயங்களில் தவறி விழுகவும் வாய்ப்புள்ளது.

பளு நிறைந்த பொருட்களை தூக்குதல்

பொதுவாக பளு நிறைந்த பொருட்களை தூக்குவது நல்லது தான். ஆனால் முதல் மூன்று பருவம் முடிந்த பின்னர், பளுவுள்ள பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும். ‘

குழந்தைகளை அழைத்துச் செல்லுதல்

இரண்டாம் முறையாக கருத்தரித்திருந்தால், வெளியே செல்லும் போது முதல் குழந்தையை தனியாக அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் திடீரென்று தூக்கு என்று சொல்வார்கள். எனவே தனியாக அழைத்துச் செல்ல கூடாது.

நீராவிக்குளியல் STEAM BATH

கர்ப்பமாக இருக்கும் போது நீராவிக்குளியல் மேற்கொள்வது நல்லதல்ல. ஏனெனில் நீராவிக்குளியலின் போது, உடலில் உள்ள இரத்தத்தின் ஓட்டமானது மிகவும் சீராக இருப்பதால், அது வயிற்றில் உள்ள சிசுவிற்கு சில கெடுதலை உண்டாக்கிவிடும்.

உடற்பயிற்சி EXERCISES

கர்ப்பத்தின் போது மிகவும் கடினமான உற்பயிற்சிகளை செய்தால், இதய துடிப்பு அதிகரித்து, நஞ்சுக் கொடிக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் குறைந்து, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் நிலைமை ஏற்படும்.

இரத்த தானம் BLOOD DONATIONS

இரத்த தானம் செய்வதால், எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இருப்பினும் கர்ப்பிணிகள் கொடுக்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அவர்களுக்கு ஏற்கனவே இரும்புச்சத்து குறைவாக இருக்கும்.

பரவும் நோய்கள் INFECTION

பரவும் நோய்களான அம்மை, டெங்கு அல்லது இதர வைரஸ் நோய்களால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து, தள்ளிளே இருக்க வேண்டும்.



BUMS (Hons), Adv. Dip. in Couns. Psychology,
Dip. in Panchakarma & Therapeutic Massage


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &