BREAKING NEWS

May 9, 2013

கல்வியை விற்கும் செயற்பாடு நீண்ட தூரம் சென்றுள்ளது - கலாநிதி தேவசிறி

கல்வியை விற்கும் செயற்பாடு நீண்டதூரம் சென்றுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.









கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்தினைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது; 'ஆரம்ப மற்றும் உயர் கல்வித் துறைகளில் இந்த விற்றல் செயற்பாடுகள் நீண்டதூரம் சென்றுள்ளன. காடையர்கள் சிலரிடம் பல்கலைக்கழகங்களை ஒப்படைத்துவிட்டு தமக்குத் தேவையானவாறு தமது தீய செயற்பாடுகளை இதனூடாக முன்னெடுப்பதற்கான முயற்சியாகும் இது. கல்வி சந்தைமயமாக்கப்படுவதன் காரணமாக பாதிக்கப்படுகின்றவர்களுக்கே மின்சாரக் கட்டண பிரச்சினையும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது,' என்றார் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &