BREAKING NEWS

May 5, 2013

பிரித்தானியா இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்

இலங்கை சர்வதேச நியமங்களை பின்பற்ற வேண்டியது அவசியம் என, பிரித்தானிய நிழல் வெளிவிவகார அமைச்சர் டக்ளஸ் அலக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நியமங்களை இலங்கை பின்பற்றத் தவறும் பட்சத்தில் அதற்கான அழுத்தத்தை பிரித்தானியா பிரயோகிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள நிலையில், பொதுநலவாய நாடுகள் மாநாட்டை பயன்படுத்தி பிரித்தானியா இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என டக்ளஸ் அலக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாவிடின் பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் அமர்வுகளை புறக்கணிப்போம் என்பதின் ஊடாக இந்த அழுத்தத்தை பிரித்தானியா பிரயோகிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &