BREAKING NEWS

May 5, 2013

அசாத் சாலியை விடுதலை செய்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை

முஸ்லீம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியை விடுதலை செய்ய வேண்டும் என, ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நீரிழவு மற்றும் உயர் குருதி அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அசாத் சாலியின் கைது மிகவும் கவலையடைய வைத்துள்ளதாக, கடிதம் ஒன்றின் ஊடாக குறித்த கோரிக்கையை முஸ்லீம் பேரவை முன்வைத்துள்ளது.

ஜனாதிபதியின் தயவின் அடிப்படையில் மனிதாபிமான ரீதியில் அசாத் சாலி விடுதலை செய்யப்பட வேண்டும் என, முஸ்லீம் பேரவையின் தலைவர் என். எம் அமீன் தெரிவித்துள்ளார்.

அசாத் சாலியை குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்து தடுத்து வைத்திருந்த நிலையில், அவர் மேற்கொண்ட உணவுத்தவிர்ப்புப் போராட்டம் காரணமாக இப்போது வைத்த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &