இலங்கை நீதிபதிகளில் ஒருவர் இந்திய விமான நிலையத்தில் வைத்து சக நீதிபதிகளை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியதுடன அவர்கள் மீது தண்ணீர் போத்தல் வீசி தாக்குதல் நடத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
விமான நிலையத்தில் தண்ணீர் போத்தலால் தாக்கப்பட்ட நிதீபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமும், நீதியரசர் மொகான் பீரிசிடமும்இ ஏனைய உயர்நீதிமன்ற நீதியரசர்களிடமும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நீதிபதிகளின் மாநாட்டுக்காக இந்தியா சென்றிருந்த இலங்கை மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரே பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நீதிபதியின் நடவடிக்கையினை விமான நிலையத்தில் கூடியிருந்த வெளிநாட்டு பயணிகள் பலரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்றனர்.
இந்த நீதிபதி சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சுமார் 10 நிமிடங்கள் வரை சக நீதிபதிகளைத் திட்டி விட்டே சக நீதிபதி ஒருவரை நோக்கி தண்ணீர் போத்தலால் தாக்கியுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்காக கடந்த ஏப்ரல் 17 தொடக்கம் 24 வரை கருத்தரங்கொன்று நடத்தப்பட்டது. அந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து 10 நீதிபதிகள் இந்தியா சென்றிருந்தனர்.
இவர்களில் ஏழு பேர் பெங்களூர் வழியாக இலங்கைக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 23 ஆம் திகதி; இரவு இவர்கள் விமான நிலையம் சென்ற போது, குறித்த நீதிபதி முன்னால் ஓடிச்சென்று ஒரு தள்ளுவண்டியை எடுத்துக் கொண்டு சென்றதுடன் தனது பயணப் பைகளில் ஒன்றை அவர் தவறவிட்டுவிட்டார்.
அவரது குணவியல்பை தெரிந்து கொண்ட ஏனைய நீதிபதிகள் அவரது பையை எடுக்காமல் சென்று விட்டனர்.
பின்னர் அதை தெரிந்து கொண்ட அந்த நீதிபதியே ஏனையவர்களை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததுடன் நீதிபதி ஒருவர் மீது தண்ணீர் போத்தலால் தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
May 6, 2013
இலங்கை நீதிபதி, இந்திய விமான நிலையத்தில் அட்டகாசம்
Posted by AliffAlerts on 14:50 in NL | Comments : 0
