BREAKING NEWS

May 7, 2013

நுரைச் சோலை அனல்மின் நிலையம் மீண்டும் செயலிழந்தது.

நுரைச்சோலை அனல்மின் நிலையம் மீண்டும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று (06) இரவு 8.42 அளவில் நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழந்ததாகவும் இன்று (07) அதிகாலை 3.30 அளவில் மின்நிலையம் வழமை நிலைக்குத் திரும்பியதாகவும் அனல்மின் நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் பல தடவைகள் நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழந்தது.

இதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் பல பகுதிகளுக்கு மின்சாரம் தடைப்படும் என மின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &