பங்களாதேஷ் தலைமை யிலிருந்து விலகினார் முஷ்பிகுர்
Posted by
AliffAlerts
on
10:47
in
SF
|

பங்களாதேஷ் அணித் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக அவ் அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்துள்ளார்.
சிம்பாப்வேக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, அவ் அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் தொடரை 2-1 என இழந்துள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை நாம் இழந்துள்ளோம். இதற்கு எனது ஆட்டத்திறனும் அணியை சரியாக வழிநடத்தாமையுமே காரணம்.
எனவே, சிம்பாப்வே அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இரண்டு இருபதுக்கு-20 போட்டியே எனது தலைமையின் கீழ் இடம்பெறும் இறுதித் தொடராகும். அத்தொடரையடுத்து நான் எனது தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவுள்ளேன்.
இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முஷ்பிகுர் ரஹீம் பங்களாதேஷ் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றமை குறிப்பிடத்தக்கது.