BREAKING NEWS

May 24, 2013

கொழும்பு துறைமுக களஞ்சிய சாலையில் தீ!


கொழும்பு துறைமுகத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் இன்று (24) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரசபை தலைவர் தெரிவித்தார்.
இன்று (24) அதிகாலை ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோகித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
துறைமுக தீயணைப்பு பிரிவினர், கடற்படை, கொழும்பு நகர சபை மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோகித்த அபேகுணவர்தன கூறினார்.
தீ விபத்து ஏற்பட்ட சரக்கு களஞ்சிய பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை இன்றைய தினத்துக்குள் எடுக்கவுள்ளதாக துறைமுக அதிகாரசபை தலைவர் பியந் பந்து விக்ரம தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &