பொத்துவில்லில் இருந்து 1000 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக மாறி, இலங்கையின் வடக்குப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மீனவர்கள் தமது கடல் நோக்கிய பயணத்தை தவிர்த்துக்கொள்ளுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக ஏற்பட்டிருந்த தாழமுக்கமே இவ்வாறு கிழக்கின் ஊடாக வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.