BREAKING NEWS

May 13, 2013

ரூ.71 லட்சத்துக்கு ஏலம் போன 'மாவோ'வின் போட்டோ

பெய்ஜிங்: சீன தலைவர் 'மாவோ'வின் அரிய போட்டோ ஒன்று ரூ.71 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இது எதிர் பார்த்ததைவிட பத்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சீனாவின் மாபெரும் தலைவர் மாவோ ஷெடாங். சீன கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். இவர் மரணம் அடைந்து 27 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இவரது அரிய போட்டோ சீனாவில் நேற்று ஏலத்துக்கு விடப்பட்டது. 

இந்த போட்டோ 1961ல் லீ ஜின் என்பவரால் எடுக்கப்பட்டது. போட்டாவின் தலைப்பாக, ‘தலைவர் மாவோ : உலக மக்களின் இதயத்தில் வாழும் பிரகாசமான சூரியன்' என்று எழுதப்பட்டுள்ளது. 

அதை பலர் போட்டி போட்டு கூடுதல் தொகைக்கு கேட்டனர். முடிவில் ரூ.30 லட்சத்துக்கு அந்த போட்டோ ஏலம் போனது. இது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 10 மடங்கு அதிகமாகும். அதை லூஷான் மவுன்டெய்ன் என்ற சுற்றுலா நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.

English summary:
A rare photo of Mao Zedong, Chinese Communist Party icon, has been sold for $ 55,300 at an auction signifying his continuing popularity in China, 27 years after his death.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &