BREAKING NEWS

May 24, 2013

கொழும்பு நகரின் பாதுகாப்புக்கு 3000 பொலிஸார்!


வெசாக் பூரணையை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நகருக்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்காக மூவாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்
கொழும்பு மாநகரிலுள்ள அனைத்து வெசாக் வலயங்களையும் உள்ளடக்கப்படும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ரோந்து சேவை, போக்குவரத்து வழிகாட்டல்கள், வீதி சோதனை போன்ற நடவடிக்கைகளிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை திருடர்கள் மற்றும் கொள்ளையர்களை கைது செய்வதற்காக சிவில் உடையில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &