BREAKING NEWS

Apr 2, 2013

அழுகிய முட்டை தாக்குதலை சந்திக்க வேண்டாம். SLC வீரர்களுக்கு BBS எச்சரிக்கை.


பணத்திற்கு பேராசைப்பட்டு இனத்தைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கட் வீரர்களிடம் பொது பல சேனா கோரியுள்ளது.
அதேநேரம் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்தியாவிற்கு சென்று கட்டுநாயக்கவில் அழுகிய முட்டை தாக்குதலை சந்திக்க வேண்டாம் எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை ஓர் சுயாதீனமான நாடு, ஈழ இராச்சியத்தை அமைக்க வேண்டுமாயின் அதனை தமிழகத்தில் அமைத்துக் கொள்ள முடியும்.
இந்த நாட்டிற்குள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த பௌத்த பிக்குகள் இடமளிக்க மாட்டார்கள்.
நாட்டுக்கு சேவையாற்றாத வாசுதேவ நாணயக்கார எம்மை தடை செய்ய முயற்சி செய்கின்றார். அது ஒருநாளும் நிறைவேறாது.
அமைச்சர் வாசுதேவ, இரண்டு வாரங்களுக்குள் சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் அளித்து கொள்கை ஒன்றை அமைக்க வேண்டும்.
பல லட்ச ரூபா செலவில் புத்தர் சிலைகளை அமைப்பதனை விடவும், முதுகெலும்புடைய பௌத்த பிக்குகளே இந்த நாட்டுக்கு தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பன்னலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &