இலங்கையில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வரும் நிலையில், இலங்கைக்கு நேராக மையம் கொண்டுள்ள சூரியன் இலங்கையின் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரவுள்ளது.
இதன்படி இன்று மதியம் 12:12 நிமிடத்தின் போது சிலாபம், வவுனியா, அடம்பன், கும்புறுப்பிட்டி நகரங்களை இணைக்கும் அகலக் கோட்டின் வழியே சூரியன் தனது உஷ்ணம் நிறைந்த அதியுச்ச்சத்தை கொடுக்கும்.
இதேவேளை, நாட்டின் அநேகமான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், கடல் சார்ந்த பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20 கிலோமீற்றர் முதல் 40 கிலோமீற்றர் வரை தென்கிழக்குத் திசையை நோக்கி வீசும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
