திராவிடன் சேனையின் தமிழர்களை காக்கும் போர் வாள் என்ற அமைப்பு உரிமை கோரி எதிர்வரும் சித்திரை 08ம் திகதிக்கு முன் தமிழர் தாயக பூமியை விட்டு முஸ்லிம் வர்த்தகரகள் வெளியேறுமாறு எச்சரிக்கை என்ற தலைப்பில் அனாமதேய துண்டுப் பிரசுரம் ஒன்று வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று போடப்பட்டுள்ளது.அந்த துண்டுப் பிரசுரத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
தமிழர் தாயக பூமியை ஆக்கிரமிக்கும் நோக்கோடு எமது தாயக மண்ணில் வர்த்தகம் செய்யும் இஸ்லாமிய வர்த்தகர்களை வெயியேறுமாறு எச்சரித்தும் அதனை அலட்சியம் செய்த இஸ்லாமிய வர்த்தகர்களே
எதிர்வரும் சித்திரை 08ம் திகதிக்கு முன்னதாக எமது மண்ணை விட்டு வெளியேறுமாறு இறுதியாக எச்சரிக்கிறோம்.
வன் முறை எமது வழியல்ல
அதுதான் வழி என நீங்கள் கருதினால்
அதைவிட வேறு வழி எமக்கில்லை.
திராவிடன் சேனை தமிழர்களை காக்கும் போர் வாள் என்று போட்டு வாளின் படமும் அத் துண்டுப் பிரசுரத்தில் போடப்பட்டுள்ளது.
