BREAKING NEWS

Apr 6, 2013

யாங்கல் மோதர விபத்து பஸ் ஓட்டுனர், நடத்துனருக்கு மரண தண்டனை


அலவ்வ,யாங்கல்மோதர எனுமிடத்தில் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குருணாக்கல் மேல் நீதிமன்றமே இவ்விருவருக்கும் மரணத்தண்டனை விதித்து இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

பாதுகாப்பான ரயில் கடவையின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த பஸ்ஸின் சாரதி பஸ்ஸை செலுத்தியமையால் இந்த விபத்து ஏற்பட்டது.

இதனால் 41 பயணிகள் பலியானமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த சம்பவத்தில் குறித்த பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் காயங்களுடன் உயிர்பிழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அலவ்வ, யாங்கல்மோதர எனுமிடத்தில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்றஇந்த விபத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் அப்பாவி படுகொலைகளுக்கு உதவி ஒத்தாசை நல்கிய நடத்துனருக்கே குருணாகல் முன்னாள் மேல் நீதிமன்ற நீதவான் பிரியந்த பெர்ணன்டோ மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட சாரதியான அப்துல் வாஹிட் ஹப்ரூல் மற்றும் நடத்துனரான மில்லவானே புத்திக குமார ஆகிய இருவருக்கே மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

அவ்விருவர் மீதும் 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததுடன் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10 வருடங்கள் என தலா 270 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு குற்றச்சாட்டுக்கு 5000 ரூபா வீதம் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டபணத்தை செலுத்த தவறின் ஒரு குற்றச்சாட்டுக்கு ஒரு மாதம் என்ற வீதத்தினட பிரகாரம் மேலும் 27 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &